\"Writing.Com
*Magnify*
SPONSORED LINKS
Printed from https://www.writing.com/main/view_item/item_id/2300361-
Item Icon
\"Reading Printer Friendly Page Tell A Friend
No ratings.
Rated: E · Poetry · Biographical · #2300361
KAMARAJAR IS A GREAT PERSON WHO IS TAMIL NADU'S CHIEF MINISTER FOR 9 YEARS.
கர்மவீரர் காமராஜர்



குலக்கல்வி என்னும் கருநாள்
நீங்க வந்த பொன்னாள் - அதுவே
காமராஜர் ஆட்சியெனும் நன்னாள்...

நவ வருட ஆட்சிக்காலம்
எங்கும் காணாத நற்காலம்
உம்மால் பெற்றோம் பொற்காலம்
அதைக் கேட்குது தற்காலம்...

தனக்குக் கிடைக்காதது பிறருக்கு கிடைக்கலாமோ? -இதுதான்
பிறரது எண்ணம்... -ஆனால்
"யான் பெறாத இன்பம் பெறுக இவ்வையகம்" -என
பிறருக்காய் சிந்தித்தார் காமராஜர்...

தாகத்தின் ஏக்கம் நீக்க அணைகள்...
வேளாண் உயர்வும் சேர்த்து தந்தது...
வறுமைப்பசி போக்கிய மதிய உணவு
இன்றும் காக்குது ஏழையின் மகவை...

ஓடி உழைத்து தேய்ந்த கால்களோ!
ஓய்வில் இருந்தால் இவ்வுலகம் மதியாதே!!
ஓய்வுக்கு ஊதியம் என்ற உத்தரவு!!!

விருதுப்பட்டியில் உதித்த காமாட்சியே
நாடு நிலை தவறாது வாழ
உமது வருகைக்காக செழித்ததே ஏழ்மை மனமே!

ஆட்சியில் ஆசை கொள்ளா கிங் மேக்கர்!
அஷ்டபுஜ ஆட்சியில் அனைத்தையும் செய்தாயே!
மருத்துவத் திட்டங்களால் அம்மை சென்றதே...

இக்காலம் உம் ஆளுமை பெற்றால்...
பாடத் திட்டங்களால் மாணவர்கள் மேதையாய்
நிதித் திட்டங்களால் வாழ்வாதர உயர்வாய்
நலத் திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாய்!!!

பாரத ரத்தினா பெற்ற பாரதத்தின் ரத்தினமே!
மக்களின் நலனுக்கு மணம் முடியா உன்னதரே...
மணம் செய்யாது மக்கள் மனதில் புகுந்தவரே!
இது உம்மைக் கொண்டாடும் பெருநாள்... (ஜூலை,15)

சிந்தையில் சிதறாது தானே அர்ப்பணம்...
பொதுநல வாழ்வில்... மக்களுக்காக!
கர்மத்தில் தவறாது வீரத்தோடு நல்லதையே செய்தவரே!
பிறர் நலனே கோளென்ற பெருந்தலைவரே!
(கோள்- குறிக்கோள்)

உமது பேரப் பிள்ளைகள் உம்மைக் வணங்கி
தற்கால ஆட்சியில் தமது காலடி பெற
உமது ஜனனம் மீண்டும் நிகழாதா எனும்
பேராசையோடு பெருங்கனவோடு மனக்கோட்டையில் வாழ்கின்றனர்...

அவரது எண்ணம் இனி எவருக்கு வருமோ???
அவரது காலத்தைக்‌ காணுவது எந்நாளோ? என
பாவம்... எவரும் அறியார்...
உம்மைப் போன்ற மகான் இத்தரணியில்
மீண்டும் அவதரிக்க வாய்ப்பே இல்லையென...
கதைகளில் கூட உம் நேர்மை காணவில்லையே...

ஊரார் புகழ ஓட்டுக்காக போலிப் பகட்டோடும்
வாசனைத் திரவியத்தால் சாக்கடை வாடையை மறைத்து
ஒரு கன்று(செடி) நட ஊரையே கூட்டி
புகைப்படம் எடுத்து செய்தியில் போட்டு
பெருமை தேடும் அரசியல்வாதியல்ல அவர்...

தற்பெருமை கொள்ளா பெருமகன்...
திரைப்படம் ஏனென கல்விக்கூடங்கள் என்றாய்...
புனிதம் பெற்ற தமிழ்நாடோ கல்வியில் ஓங்கிற்று!
அந்தக் கல்விக் கூடங்கள் கூட திறனற்றதே...
திறனாக்க பாடத்திட்டம் வகுக்க நீர் வேண்டும்...
படிக்கா மேதையானாலும் உலகறிந்த மாமேதை...

குப்தப் பேரரசின் ஆட்சி எப்படியோ நானறியேன்
(இந்தியாவின் பொற்கால ஆட்சி குப்தப் பேரரசு)
அறிந்தவரை உமது ஆட்சியே பொற்காலம்
வேறென்றும் காணவில்லை அக்காலம்
பிறப்பைக் கொண்டாடுகிறது தற்காலம்...
உமது காலமே நற்காலம்...
இந்த காலமோ கலிகாலம்...

🙏🙏🙏

© Copyright 2023 ர மலர்கொடி (r.malarkodi at Writing.Com). All rights reserved.
Writing.Com, its affiliates and syndicates have been granted non-exclusive rights to display this work.
Printed from https://www.writing.com/main/view_item/item_id/2300361-