\"Writing.Com
*Magnify*
SPONSORED LINKS
Printed from https://www.writing.com/main/view_item/item_id/2217297-
Item Icon
by Nandhu Author IconMail Icon
Rated: E · Article · Children's · #2217297
குழந்தைகளை பாதிக்கும் கொரோனா
அலாரம் அடித்துக் கொண்டே இருக்கிறது.. ஒவ்வொரு முறையும் அரை கண்களில் செல்போனை தேடி எடுத்து அலாரத்தை மியூட் செய்கிறான்.. நேரம் கடக்க கடக்க ஜன்னல் வழியே வெளிச்சம் சூடாய் படர்கிறது..

144 ஊரடங்கு தடை என்பதால் வெளியே செல்ல முடியாத நிலை. இரவு முழுவதும் இன்டர்நெட் வேட்டை அதனால் கண்கள் சிவந்திருக்க நண்பர்களும் இதே பார்முலாவில் இருப்பார்கள் போலும், ஒருவரும் அழைக்கவில்லை..

அப்பாவும் வீட்டில் இருப்பதால் வீட்டை தூய்மை படுத்துதல், அம்மாவின் சமையலுக்கு உதவுதல் போன்ற வேலைகளில் பிசியாக இருக்கிறார்.. பசிக்கிறது என்ற சத்தம் வயிற்றில் கேட்க பல் துலக்கி அவசர அவசரமாய் முகம் கழுவிக் கொண்டு, அம்மாவை அழைத்து உணவு பரிமார வைத்து உண்டதும், மீண்டும் படுக்கையை தேட வைக்கிறது கண்கள்..

சரி அம்மாவிற்கும் மகன் வீட்டில் சும்மாதானே இருக்க முடியும் என்று எண்ணி அவன் போக்கில் விட மேலும் குசியாகி போகிறது அவனுக்கு.. முழு நேர சோம்பேறி என்கிற எண்ணம் தனக்குள் ஏற்பட்டாலும், வேறு வழி செல்போன்தான் கதி என்றாகி விட்டது அவனுக்கு..

பப்ஜி என்கிற போதையில் அடிக்ட் ஆன அவனுக்கு ஒவ்வொரு நாளும் அந்த போதை மேலும் மேலும் உச்சம் தொடுகிறது.. நாளுக்கு நாள் எதிரிகளை கொல்லும் ஆத்திரம் மேலோங்க வைக்கிறது அந்த ஆண்ட்ராய்டு விளையாட்டு.. சில சமயம் தனது நண்பர்கள் இவன் அழைக்கும் சமயத்தில் ஆன்லைன் வரவில்லை என்றால் கூட கோபத்தில் வார்த்தைகளால் திட்டும் சத்தம் அவன் அறையை விட்டு வெளியே கேட்கும்..

தனது வீட்டிற்கு அக்கம் பக்கத்தினர் வந்தால் கூட அவர்களின் முகத்தை பார்ப்பதில்லை, பதிலும் செல்போனை பார்த்தபடிதான்.. அந்த பப்ஜியில் நண்பர்களுடன் ஒருமுறை ஆட்டமிழந்தாலும் தாழ்வு மனப்பான்மையும், தான் தோற்று விட்டதாகவும் எண்ணுகிறான்..

வெறும் விளையாட்டு தானே என்கிற எண்ணம் துளி அளவு ஏற்படுவதில்லை.. தன்னை ஒரு வீரன் போல் நினைத்து கொள்கிறான்.. ஆனால் வெளி உலகிற்கு வெளியே வராத சோம்பேறி என்கிற பெயரை ஏற்படுத்தி கொள்கிறான்.. படிப்பின் மீதும் அக்கறை இருப்பதில்லை, பெற்றவர்களும் கண்டு கொள்வதில்லை..

அவனால் இரவு பகல் என்ற மாற்றங்கள் மட்டுமே உணர முடிகிறது, சார்ஜ் 5% க்கும் குறைவாக இருந்தால் மட்டும் சார்ஜரை தேடுகிறான்.. சார்ஜ் ஏரும் அந்த நேரத்தில் கூட குளிப்பதற்கு மனம் வருவதில்லை.. அப்பாவின் அன்பான அதட்டலை ஏற்று காக்கை குளியலை முடிக்கிறான்..

இப்படி ஒவ்வொரு நாளும் மனம் பாதிப்புக்குள்ளாகி அவனை வெளி உலகம் தெரிந்து கொள்ளாத மண்ணாக்கி விடும் பப்ஜி கொரோனா'வை விட பெரிய வைரஸ் என்பதை பெற்றோர்கள் புரந்து கொள்ள வேண்டும்..

குழந்தைகளுக்கு செல்போன் அவசியமில்லாத ஒன்று, குழந்தை செல்போன் பார்த்தால்தான் இரண்டு வாய் அதிகம் சாப்பிடுவான், இரவு கார்டூன் வீடியோக்களை பார்த்தால்தான் தூங்குவான் என்கிற பார்முலாவை பெற்றோர்களே துனித்து அவர்களின் பாதையை மாற்றி விடுகிறார்கள்..

செல்லம் கொடுத்து வளர்த்துவதும், செல்லை கொடுத்து வளர்த்துவதும் அறிவுக்கும் வளர்ச்சிக்கும் தூரத்தை ஏற்படுத்தும்.. ஆகையால் இந்த ஊரடங்கு உத்தரவில் குழந்தைகளையும் உங்கள் கவனிப்பில் வையுங்கள்.. செல்போனில் எத்துனை முறை விளையாடினாலும் வேற்காது என்பதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

21 நாட்கள் விடுமுறையை அவர்கள் செல்போனை தவிர்த்து பயன்படுத்தும்படி செய்ய வேண்டும்.. மண்ணில் இறங்கி விளையாட அறிவுறுத்துங்கள், பெற்றோர்கள் இந்த சூழ்நிலையில் குழந்தைகளோடு விளையாட களத்தில் இறங்குங்கள்.. உங்கள் வீட்டு வரண்டாவில் அல்லது வீட்டு பக்கத்தில் விளையாடுங்கள்..

இந்த வாய்ப்பு என்றும் அமைந்திடாது.. இந்த ஊரடங்கு தடை உத்தரவை மீறாமல், கொரோனா'வை பற்றிய விழிப்புணர்வையும், உங்கள் குழந்தைகளை பற்றிய விழிப்புணர்வையும் அறிந்து வைத்து கொள்ளுங்கள்.. உங்கள் குழந்தைகளை தாக்கும் வைரஸ் பப்ஜி போன்ற செல்போன் விளையாட்டு அப்ளிகேஷன்'தான் என்பதை உணருங்கள்..!!

அன்புடன்,

நந்தகுமார் (எ) சிலந்தி
© Copyright 2020 Nandhu (nandhu01 at Writing.Com). All rights reserved.
Writing.Com, its affiliates and syndicates have been granted non-exclusive rights to display this work.
Printed from https://www.writing.com/main/view_item/item_id/2217297-